கழிவுகளை கொட்டுவதால் மாசுபடும் கண்மாய்

போடி, ஜன. 20: போடி அருகே, கழிவுகளை கொட்டுவதால், டொம்புச்சேரியில் உள்ல டொம்பிச்சியம்மன் கண்மாய் மாசடைந்து வருகிறது. இதை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

போடி அருகே டொம்புச்சேரி கிராம ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயமே முக்கிய தொழிலாகவும், கூலித்தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். இக்கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் டொம்பிச்சியம்மன் கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் முல்லைப் பெரியாறு நீரை தேக்கி பாசனத்துக்கு பயன்படுத்துகின்றனர். கண்மாயில் நீரை தேக்குவதால் இப்பகுதியில் நிலத்தடி நீரும் உயருகிறது. இந்நிலையில் கண்மாயில் கோழி, பிளாஷ்டிக் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். டொம்புச்சேரி-உப்புக்கோட்டை மெயின்ரோட்டில் இந்த கண்மாய் குறுக்கே பாலமும் உள்ளது. அந்த பாலத்தில் இருந்து குப்பைக் கழிவுகளை வீசுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பொதுப்பணித்து றையினர் கண்மாயில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>