வேன் மோதி கல்லூரி மாணவர் பலி

கம்பம், ஜன. 20: கம்பத்தில் பிக்கப் வேன் மோதி டூவீலரில் சென்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். கம்பம் மணிநகரம் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் சரவணன் (19) பி.காம் மூன்றாமாண்டு மாணவர். இவர், நேற்று காலை கேரள மாநிலம் புளியமலையில் ஏலக்காய் தோட்டத்தில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்கு வீட்டில் இருந்து டூவீலரில் புறப்பட்டு சென்றார். கம்பம்மெட்டு சாலையில் சிலுவை கோவில் அருகே புறவழிச்சாலையை கடக்க முயன்றபோது, கூடலூரில் இருந்து தேனி சென்ற பிக்கப் வேன் டூவீலர் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் டூவீலரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சரவணன் சம்ப இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த சென்ற கம்பம் வடக்கு போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிக்கப் வேன் டிரைவரான கூடலுரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (47) என்பரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

>