மயிலாடும்பாறை அருகே நாட்டுதுப்பாக்கி பறிமுதல் கூலித்தொழிலாளி கைது

வருசநாடு, ஜன. 20: மயிலாடும்பாறை அருகே, நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக கூலித்தொழிலாளியை கைது செய்தனர். தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே உள்ள உப்புத்துறை மலைக்கிராமத்தில் சிலர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கடமலைக்குண்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கடமலைக்குண்டு சப்இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையிலான போலீசார் உப்புத்துறை கிராமத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த காமணன் என்னும் கூலித்தொழிலாளி வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக காமணனை கைது செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், காமணனை ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>