கம்பத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

கம்பம், ஜன. 20: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்னும் மக்கள் கிராம சபை கூட்டம் கம்பத்தில் உள்ள கூளண்ணன் தெருவில் நேற்று நடந்தது. இதில் 16,17,18,19 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் திமுக ஆட்சியில் கலைஞர் மக்களுக்குச் செய்த நல்ல பல சாதனைகள் குறித்து பேசினார். கம்பம் பொறுப்பாளர்கள் (வடக்கு) வக்கீல் துரை நெப்போலியன், (தெற்கு) சூர்யா செல்வக்குமார் ஆகியோர் அதிமுக அரசின் அவலங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வாக்கு சேகரிப்பது குறித்து பேசினர். இதை அடுத்து அதிமுகவை நிராகரிப்போம், திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என கட்சியினர் கோஷமிட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொறுப்புக் குழு உறுப்பினர்கள், நகர் கழக பொறுப்புக் குழு உறுப்பினர்கள், அணி பொறுப்பாளர்கள், மாநில பேச்சாளர்கள், வார்டு பொறுப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>