×

பளுகல் சோதனை சாவடியில் பெண் ஏட்டுவிடம் ஆபாச பேச்சு தனியார் நிறுவன சூப்பர்வைசர் கைது

மார்த்தாண்டம், டிச. 20: திருவட்டார் அருகே மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் பிரபு சுந்தர். இவரது மனைவி விஜிலா(39). மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று விஜிலா, காவலர் சுப்புராஜ் ஆகியோர் பளுகல் அருகே தோலடி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வாகனத்தில் செருவல்லூர் தேவிகோடு பகுதியை சேர்ந்த திலீப்குமார் (43) என்பவர் வந்தார். இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இதையடுத்து விஜிலா, திலீப்குமார் வந்த வாகனத்தை நிறுத்தி வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது திலீப்குமார் திடீரென ஏட்டு விஜிலாவின் அருகே வந்து ஆபாசமாக பேசினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜிலா தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த திலீப்குமார் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து பெண்மைக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டார். இதுகுறித்து விஜிலா பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பெண் ஏட்டுவிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்த திலீப்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Palukal ,Marthandam ,Prabhu Sundar ,Muvatthu Mugham ,Thiruvattar ,Vijila ,Marthandam police station ,Subbaraj ,Tholadhi ,Palukal… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா