- பண்ருட்டி
- பண்ருட்டி காவல் துறை
- அசோகன்
- துணை
- பிரேம்குமார்
- டிஎஸ்பி
- ராஜா
- கண்டரக்கோட்டை
- பண்ருட்டி-சென்னை சாலை
- விழுப்புரம்…
பண்ருட்டி, டிச. 20: பண்ருட்டி-சென்னை சாலை கண்டரக்கோட்டை போலீஸ் சோதனை சாவடியில் பண்ருட்டி டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், விழுப்புரத்தை சேர்ந்த முகமது பாசில்(35), திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(39) ஆகியோர் காரில் வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து காரை பறிமுதல் செய்து, காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள 330 கிலோ புகையிலை மூட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்கு வருகை தந்து கடத்தலில் ஈடுபட்டு கைதான இருவரிடம் விசாரணை நடத்தினார். மேலும் சிறப்பாக செயல்பட்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல்காரர்களை கைது செய்த பண்ருட்டி போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.
