கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்படுத்தும் கால்நடைகள் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

தொண்டி, ஜன.20:  தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரோட்டில் கால்நடைகள் திரிகின்றது. இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த பகுதியில் கூட்டமாக படுத்து கொள்வதால் டூவீலரில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

தொண்டி கிழக்கு கடற்கரை சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் கால்நடை வளர்ப்போர் உரிய முறையில் பராமரிக்காமல் ரோட்டில் விட்டு விடுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கும், கால்நடை உரிமையாளர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது.

தொண்டி, நம்புதாளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது அதிகளவில் கால்நடைகள் ரோட்டில் திரிகின்றது. இரவு நேரத்தில் இருட்டான பகுதியில் ஏராளமான மாடுகள் படுத்துள்ளது. இது தெரியாமல் டூவீலர் மற்றும் வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். இதை தடுக்க பேரூராட்சி மற்றும் ஊராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து காதர் கூறியது, தொண்டியில் செக்போஸ்ட், வட்டாணம் ரோடு மார்க்கெட் பகுதி என கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் மாடுகள் அதிமாக படுத்து கிடக்கிறது.

Related Stories: