தேனி, டிச. 19: தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் குவாண்டம் சார்ந்த கணக்கீட்டு நுண்ணறிவு குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் தர்மராஜன்தலைமை வகித்தார். கணினி அறிவியல் தொழில் நுட்ப பள்ளியின் தலைவர் சிவகாமி வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் மாறன்மணி துவக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் துணை முதல்வர் சுசீலா சங்கர் வாழ்த்தி பேசினர்.
இக்கருத்தரங்கில் பிரான்ஸ் நாட்டின் நானோ தொழில்நுட்ப தகவல் மைய ஆராய்ச்சியாளர் தெபஜோதிபிஸ்வாஸ் கலந்து கொண்டு குவாண்டம் இயந்திர கற்றல் மற்றும் உணர்தல் தலைப்பில் பேசினார். விஞ்ஞான விருது பெற்ற பிரசாந்த், டாக்டர்.சகுந்தலா ஆகியோர் கலந்து கொண்டு ககுவாண்டம் கணக்கீடு இணைந்த தொழில்நுட்பங்களின் எதிர்காலம் தலைப்பில் பேசினர். மேலும், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு உதவிப்பேராசிரியர் சபயாச்சிபட்டாச்சாரியார் பேசினார். முடிவில் கல்லூரி கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியை மீனா நன்றி கூறினார்.
