ஏகாபுரத்தில் எருதாட்ட விழா 25 காளைகள் பங்கேற்பு

இளம்பிள்ளை, ஜன. 20: இளம்பிள்ைள அடுத்த ஏகாபுரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, எருதாட்ட விழா நடைபெற்றது. தமிழகத்தில்  பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு,  மஞ்சுவிரட்டு, எருதாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டு  வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த  ஏகாபுரத்தில் எருதாட்டம் நடந்தது. இங்குள்ள மாரியம்மன் கோயிலில் தைப்பூச  திருவிழாவை முன்னிட்டு நேற்று எருதாட்டம் விழா நடைபெற்றது. இதில் சேலம்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட 25க்கும்  மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. கோயில் மைதானத்தில் அலங்கரிக்கப்பட்ட  காளைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அவை ஒன்றன்பின் ஒன்றாக  களத்தில் விடப்பட்டது. சீறிப்பாய்ந்த காளைகளிடம், இளைஞர்கள் பொம்மையை  காட்டியதால் காளைகள் ஆக்ரோஷமடைந்தது. விழாவை இளம்பிள்ளை சுற்றுவட்டார  பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

Related Stories:

>