குளச்சல், டிச.19: குளச்சலில் சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குளச்சல் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் தனீஸ் லியோன் நேற்று குளச்சல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டார். கொட்டில்பாடு பஸ் ஸ்டாப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டபோது அங்கு கடியப்பட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது தாயின் ஸ்கூட்டியை ஓட்டி வந்தான். இதையடுத்து போலீசார் ஓட்டுனர் உரிமம் பெற வயது பூர்த்தி ஆகாத சிறுவனுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதி அளித்த வாகனத்தின் உரிமையாளரும், தாயாருமான சகாய ரெஜிலா (40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
