நாமக்கல்லில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

நாமக்கல், ஜன. 20: நாமக்கல் வந்த திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு, திமுகவினர் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். ஒரு மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின், நேற்று பள்ளிபாளையம் ஒன்றியம் பாதரை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.பின்னர், அவர் கரூர் வழியாக புதுக்கோட்டை செல்வதாக இருந்தது.நேற்று காலை 11 மணிக்கு அவரது பயணம் நாமக்கல் வழியாக மாற்றம் செய்யப்பட்டது.திடீரென மு.க. ஸ்டாலின் நாமக்கல் வழியாக திருச்சி செல்வதாக தகவல் வெளியானது. இதை அறிந்த,ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே மணிக்கூண்டு பகுதியில் திரண்டனர். தொண்டர்களின் கட்டுங்கடங்காத கூட்டத்தின் காரணமாக, போலீசார் சுமார் 30 நிமிடம் அவ்வழியில் வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர்.

பிற்பகல் 12.30 மணிக்கு மு.க ஸ்டாலின் கார் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே வந்தது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை வரவேற்று கோஷமிட்டனர். மணிக்கூண்டு அருகில், மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார் தலைமையில் திமுகவினர் ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் வரவேற்பை பார்த்த மு.க ஸ்டாலின் திமுகவினரை பார்த்து உற்சாகமாக கையை அசைத்தார். வரவேற்பு நிகழ்ச்சியில்,மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், நகர பொறுப்பாளர்கள் ராணா.ஆனந்த்,சிவக்குமார், பூபதி, முன்னாள் கவுன்சிலர்கள் சரவணன், ரவீந்திரன், பால்ரவி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மதிவேந்தன்,தகவல் தொழில்நுட்ப அணி விஸ்வநாத்,கடல்அரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம்: சேலத்திலிருந்து சங்ககிரி வழியாக வந்த திமுக தலைவருக்கு வெப்படை 4 சாலை சந்திப்பில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் பொறுப்பாளர் யுவராஜ், மாவட்ட அவைத்தலைவர் நடனசபாதி, மாவட்ட பொருளாளர் குமார், நகர செயலாளர்கள் பள்ளிபாளையம் ரவிச்சந்திரன், குமாரபாளையம் செல்வம், திருச்செங்கோடு தங்கவேல்,பேரூர் செயலாளர்கள் ஆலாம்பாளையம் கார்த்திராஜ், படைவீடு ராமமூர்த்தி,மல்லை திருமலை,முன்னாள் ஒன்றிய செயலாளர் வெப்படை செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாஜலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில், துணை அமைப்பாளர் செல்வம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பூங்கோதை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜிதேந்திரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரவிமோகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் வினோத், மல்லசமுத்திரம் பேரூர் செயலாளர் திருமலை,

நிர்வாகிகள் சக்திவேல், ஜாகீர் உசேன், பள்ளிபாளையம் திமுக நிர்வாகிகள் குளோப்ஜான்,பாலமுருகன், ஜிம்செல்வம், ஜெயகோபி, கொக்கராயன்பேட்டை இளங்கோ, ரமேஷ், தமிழரசு, முருகேசன், செந்தில், தங்கராசு, துரைராஜ் பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சங்கீதா செந்தில்குமார், ஜெயமணிமுருகேசன், தனசேகரன், ஷெரிப், வடிவேல், சம்பத்குமார், செல்வராஜ், பெரியசாமி, ராகேஷ்கண்ணா, சண்முகவேல், சீனிவாசன், முன்னாள் சேர்மன் துரைசாமி, குமாரபாளையம் ஜெகநாதன், பாதரை ஊராட்சி செயலாளர் ராஜ்குமார், காடச்சநல்லூர் ராகேஷ்கண்ணா, ஆலாம்பாளையம் கதிர்வேல், புதுப்பாளையம் சுகுமார், வேல்முருகன், கோட்டை ராஜேந்திரன், பூலக்காட்டூர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு:கிராமசபைக்கூட்டத்தை முடித்து விட்டு நாமக்கல் சென்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு  திருச்செங்கோடு சட்டையம்புதூர் அஞ்சல் நிலையம் முன்பு, நகர பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.மாவட்ட செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ  முன்னிலை வகித்தார். நகர பொறுப்புக்குழு  உறுப்பினர்கள் ராஜேந்திரன், பெருமாள், ஆறுமுகம், ரமேஷ், மகேஸ்வரி மற்றும் வார்டு செயலாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>