ஓசூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

கிருஷ்ணகிரி, ஜன.20:ஓசூர் செயின்ட் ஜோசப் மகளிர் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் பயிலும் பெற்றோரை இழந்த மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவிகளுக்கு தலா ₹7,500ம், பெற்றோர் இருவரையும் இழந்த மாணவிகளுக்கு தலா ₹10 ஆயிரம் என 60 மாணவிகளுக்கு ₹4.50 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் ஐவிடிபி இயக்குநரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தைபிரான்சிஸ் பங்கேற்று, கல்வி உதவித்தொகையை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, பெண்கள் பயிலும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதிலும் ஐவிடிபி நிறுவனம் தனி கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, இக்கல்லூரி மாணவிகள் 60 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளோம். இதுவரை பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ₹3.43 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>