பர்கூரில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.20: பர்கூரில் ஒன்றிய திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தராசன் தலைமை வகித்தார். முன்னாள் எம்பி சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ பங்கேற்று பேசினார். கூட்டத்தில் தொழிலாளர்கள், மகளிர் அமைப்பினர், ஜவுளி வியாபாரிகள், களப்பணியாளர்கள் என ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>