×

கிருஷ்ணகிரி அருகே விபசார புரோக்கர் கொலையில் மதுரை லாரி டிரைவர் கைது

கிருஷ்ணகிரி, ஜன.20: குருபரப்பள்ளி அருகே விபசார புரோக்கரை கொலை செய்த வழக்கில் மதுரையை சேர்ந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கே.பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் 45 வயது பெண். அவர் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு விபசார தொழில் செய்து வந்தார். அவருக்கு புரோக்கராக தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன்(45) என்பவர் இருந்தார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி அவர்கள் போலுப்பள்ளி அருகே நின்றபோது அந்த வழியாக வந்த லாரி டிரைவரை நிறுத்தி உல்லாசத்திற்கு அழைத்தனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் லாரி டிரைவர் இரும்பு கம்பியால் வெங்கடேசனையும், அந்த பெண்ணையும் சரமாரியாக தாக்கி விட்டு சென்றார். இதில் வெங்கடேசன் இறந்தார். அந்த பெண் படுகாயமடைந்தார். இந்த கொலை குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி விசாரணை நடத்தியதில், மதுரை மாவட்டம் விராட்டிப்பத்து-தேனி சாலையைச் சேர்ந்த சுரேஷ்குமார்(32) என்ற லாரி டிரைவர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று பொள்ளாச்சியில் கைது செய்தனர்.

அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 17ம் தேதி இரவு கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் லாரியை ஓட்டிச் சென்றபோது போலுப்பள்ளி அருகே சாலையோரமாக நின்று கொண்டு பெண்ணும், ஆணும் டார்ச் லைட் அடித்தபடி லாரியை நிறுத்தினர். அப்போது அந்த பெண் உல்லாசமாக இருக்க என்னை அழைத்தார். அப்போது, அவருடன் இருந்த நபர் ₹200 கொடுத்தால் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். நானும் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்க முடிவு செய்து, அந்த பெண்ணிடம் ₹200 கொடுத்து விட்டு அவரை அங்குள்ள மறைவிடத்திற்கு அழைத்துச் சென்றேன். உல்லாசமாக இருந்த நேரத்தில், அந்த பெண் என்னை பிடித்து தள்ளினாள். என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு உல்லாசமாக இருக்க மறுத்ததால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனடியாக நான் அவள் கையில் வைத்திருந்த ₹200ஐ பிடுங்க முயற்சி செய்தேன். அப்போது அந்த பெண் கூச்சலிட்டதால், அங்கு புரோக்கர் வெங்கடேசன் ஓடி வந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நான், லாரியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து அந்த பெண்ணையும், வெங்கடேசனையும் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றேன். ஏற்கனவே இதேபோல விபசார அழகி ஒருவர் கூச்சலிட்டதால், அவருடன் வந்தவர்கள் என்னை அடித்து பணத்தை பிடுங்கி சென்றனர். அதேபோல ஒரு சம்பவம் தற்போதும் நடந்து விடக்கூடாது என்பதால் நான் அவர்களை இரும்பு கம்பியால் அடித்தேன். அதில், வெங்கடேசன் இறந்துவிட்டார். இவ்வாறு அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Tags : Madurai ,lorry driver ,prostitute broker ,Krishnagiri ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...