×

தேமுதிக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் காவேரிப்பட்டணத்தில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா மாவட்ட செயலாளர் அன்பரசன் தலைமையில் நடந்தது. எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் சின்னராஜ், காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் விஜய்வல்லரசு, பேரூர் செயலாளர் ரமேஷ், அவைத்தலைவர் காளியப்பன், பொருளாளர் கனகன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், அப்பாபிள்ளை, கோவிந்தராஜன், முருகன், வஜ்ஜரவேல், மாதையன், காதர், மகேந்தரன், சண்முகம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் மாவட்ட செயலாளர் அன்பரசன் தலைமையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ...

Tags : MGR ,Birthday Celebration ,Temujin ,
× RELATED பேட்டை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதி...