ரிக் உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, ஜன.20: தர்மபுரி மாவட்ட ரிக் உரிமையாளர்கள் மற்றும் புக்கிங் ஏஜென்ட் சங்கம் சார்பில், குண்டல்பட்டியில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவா தலைமை வகித்து பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குணசேகரன், ரிக் இந்தியா இயக்குனர் மூர்த்தி, அகில இந்திய ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டைகர் வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், டீசல் விலையேற்றம் காரணமாக டிரில்லிங் விலை உயர்த்துவது குறித்து உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பொருளாளர் திருப்பதி உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>