தர்மபுரி- கொப்பலூருக்கு நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

தர்மபுரி, ஜன.20: பென்னாகரம் அருகே கொப்பலூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கூலி தொழில் செய்கின்றனர். இக்கிராமத்திற்கு தர்மபுரியில் இருந்து நகர பேருந்து இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கினால், கடந்த 10 மாதமாக அரசு பஸ் இயக்கவில்லை. இந்நிலையில் கல்லூரி, பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட தர்மபுரி- கொப்பலூர் அரசு பஸ்சை மீண்டும் இயக்க, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தர்மபுரி- நெக்குந்தி வரை இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்சை, கொப்பலூர் வரை நீடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>