×

ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பயணிகள்

அரூர், ஜன.20: மொரப்பூர் ரயில் நிலையத்தை சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மக்கள், பணி நிமித்தமாக தினமும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினமும் பயணம் செய்கின்றனர்.ரயில் நிலையத்தில் இரண்டு பிளாட்பாரங்கள் உள்ளன. பயணிகள் ரயில் நிலையத்தில் இறங்கி வெளியேறுவதற்காக, உயரமான நடை மேடை பாலம் வசதி உள்ளது. ஆனால் பிளாட்பாரத்தின் இறுதி பகுதியில் நடைமேடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ரயில் வந்த போது, பயணிகள், நடை மேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தில் இறங்கி, ரயிலின் அடியில் புகுந்து செல்கின்றனர்.ரயில்வே துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டும், மக்கள் அலட்சியமாக தண்டவாளத்தை கடந்து செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Passengers ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...