மெஞ்ஞானபுரம் - நாசரேத் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார்

உடன்குடி, ஜன. 20: மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. யூனியன் சேர்மனும், ஒன்றிய திமுக செயலருமான பாலசிங் தலைமை வகித்தார். மெஞ்ஞானபுரம் தலைமை சேகரகுரு டாம் கோல்டுவின் ஆரம்பஜெபம் செய்தார். பள்ளித்தலைமை ஆசிரியர் கான்ஸ்டன்டைன் வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர் ஜெசிபொன்ராணி, பள்ளி தாளாளர் பெஞ்சமின் லிண்டால், உதவி சேகரகுரு ஸ்டீபன்பால் ராபின்சன் முன்னிலை வகித்தனர். தலைமைஆசிரியர் கான்ஸ்டன்டைன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏம்எல்ஏ  மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை 85 பேருக்கு வழங்கினார். இதில் திமுக மாநில மாணவரணி துணைச்செயலர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலர் கிறிஸ்டோபர் ராஜன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் வர்த்தகஅணி இளங்கோ, மகளிர் தொண்டரணி விஜயா, கலைஇலக்கியஅணி ரஞ்சன், இசக்கிதுரை, விவசாய அணி முருகன், மெஞ்ஞானபுரம் ஊராட்சி செயலர் ஜெரால்டு தனராஜ், விஜயன், தினகர், சார்லஸ், தானியேல், முத்துப்பாண்டி, ஜெயராணி பாப்பா, ஐசக், அல்பர்ட், உட்பட பலர் பங்கேற்றனர்.  நாசரேத்:    நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சந்திரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் வரவேற்றார். பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். 177 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.

இதில் உடையார்குளம் சுகாதார அலுவலர் தியாகராஜன், பேரூராட்சி அலுவலர் ராம்முருகன், ஆசிரியர்கள் பங்கேற்றனர். நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சாந்தகுமாரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை மாசில்லா வரவேற்றார். நாசரேத் எஸ்ஐ சூரியன் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். 195 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. பள்ளி இளநிலை உதவியாளர் கிங்ஸ்லி, நாசரேத் தனிப்பிரிவு காவலர் ராபின், ஆசிரியைகள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியை மெர்லின் ரத்தினாவதி நன்றி கூறினார்.

Related Stories: