மதுராந்தகம் விவோகானந்தா பள்ளியில் கொரோனாவால் பலியானர்களுக்கு அஞ்சலி

மதுராந்தகம்: கொரோனா பரவல் காரணமாக, கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. ஊரடங்கு தளர்வுக்கு பின் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேற்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், நேற்று காலை பள்ளிக்கு சென்றனர். அப்போது, அவர்களுக்கு கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்தி, தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்த பின்னரே வகுப்பறைக்கு செல்ல அனுமதித்தனர்.

இதற்கிடையில், கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் பள்ளி வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  நடந்தது. இதில், மாணவ, மாணவிகள்  கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட்ட மருத்துவர்கள், காவல் துறையினர், சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு சல்யூட் அடித்து  மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், பள்ளி தாளாளர் லோகராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>