தூய்மை பணியாளர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்: மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. பல இக்கட்டான நேரங்களில், பேரிடர் காலங்களில் பணியாற்றி வந்தவர்கள். இவர்கள் பணி பாராட்டுக்குரியது. மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை தாண்டி, பல்வேறு துறைகளை உள்ளது. எல்லா துறையிலும் 50% பணி இடங்கள் காலியாக உள்ளது. அதில் இவர்களை பணியமர்த்த வேண்டும். மாநகராட்சி ஆணையரும் உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார். அப்படி செய்யவில்லை என்றால் திமுக என்றும் இந்த ஊழியர்களுக்கு துணை நிற்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>