குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க கோரி பொது மக்கள் சாலை மறியல்

திருப்பூர் , ஜன. 19: திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க கோரி ஜே.ஜே.நகர், பல்லக்காட்டு காலனி பகுதி பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் நல்லூர் அருகே காசிபாளையம் ஜே.ஜே.நகர், பல்லக்காட்டு காலனி பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் வழிபாட்டு தளங்கள் உள்ளன. இந்நிலையில் இங்கு மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் பல நாட்களாக புகார் தெரிவித்து வந்தனர். இது குறித்து பல முறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து அந்த பணிகளை முழுமையாக செய்து முடிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அந்த பகுதி முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் சாலை வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று காசிபாளையம் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்த ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 56 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

 இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: