சிறுவாணி அணை பக்க சுவரில் நீர் கசிவு

கோவை, ஜன.19:  கோவை சிறுவாணி அணையின் பக்க சுவரில் நீர் கசிவு இருப்பதால் அதை பலமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 15 மீட்டர். 26.5 சதுர மீட்டர் பரப்பிற்கு டீ ேகாப்பை போன்ற தோற்றத்தில் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் பக்க சுவர், 80 ஆண்டிற்கு முன் கட்டப்பட்டது. 1973ம் ஆண்டில் அணையின் பக்க சுவர் சிறிது உயர்த்தி கட்டப்பட்டது. அணை முழுவதும் நிரம்பினால் இரு கண் பாதை வழியாக நீர் சிறுவாணி ஆற்றில் உபரியாக பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அணையின் பக்க சுவரில் லேசாக நீர் கசிவு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. வழக்கமாக அணையில் நீர் தேக்கம் உச்சத்தில் இருந்தால் நீர் கசிவு வருவது இயல்பானதுதான். ஆனால் நீர் கசிவு அதிகமானால் விரிசல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

இதை தவிர்க்க அணையின் பக்க சுவரில் டிரில்லிங் போட்டு அதில் சிமெண்ட்டை ‘இன்சக்ஷன்’ முறையில் அதிக அழுத்தத்தில் செலுத்தவேண்டும்.  ஆண்டிற்கு ஒரு முறை இந்த முறையில் பலமாக்கும் பணி நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டில் அணை பலமாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக பணி நடத்தப்படவில்லை. இதற்கிடையே அணையின் நீர் தேக்க பகுதியில் கனமழை பெய்து அணை நிரம்பி விட்டது. அணை முழுவதும் நிரம்பிய நிலையில் சிமெண்ட் பால் மூலமாக அணையை பலமாக்க முடியாது. தற்போது அணையில் 35 அடி அளவிற்கு நீர் தேக்கம் இருக்கிறது.

இந்த நீர் தேக்கம் 20 அடிக்கு குறைந்த பின்னர் அணையின் பக்க சுவரை பலமாக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் திட்டமிட்டுள்ளனர். வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் அணையை பலமாக்கும் பணியை துவக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அணை பகுதியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கே கருங்கற்களை வைத்து தடுப்புச்சுவர் ஏற்படுத்த ேகாவை குடிநீர் வடிகால் வாரியத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அணை நீர் மட்டம் குறைந்ததும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: