தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சாலைகள் கேட்டு 1 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

ஈரோடு, ஜன. 19: தேசிய நெடுஞ்சாலையில் பவானி லட்சுமிநகர் முதல் செங்கப்பள்ளி வரை சாலையை சீரமைத்து, இணைப்பு மற்றும் சர்வீஸ் சாலைகள் அமைத்து தரக்கோரி, ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்துக்குள் தேசிய நெடுஞ்சாலை 47ல்  பவானி லட்சுமிநகர் துவங்கி செங்கப்பள்ளி வரை போதிய இணைப்பு சாலை, சர்வீஸ் சாலை, பாலங்கள் இல்லை. இதனால் இரு புறங்களிலும் உள்ள கிராமத்தினர் சாலையை கடக்கும் போது விபத்துக்குள்ளாகின்றனர். பாலம் மற்றும் சா்வீஸ் சாலை இல்லாததால் பிரதான சாலையின் குறுக்காக செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகின்றனர்.

எனவே பவானி முதல் செங்கப்பள்ளி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் தேவையான இடங்களில் பாலம் அமைத்து, இணைப்பு சாலை, சர்வீஸ் சாலையை அமைத்து, சிக்னல், விளக்குகள் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி தலைமையில் பல்வேறு இடங்களில் ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பெருந்துறை, காஞ்சிகோவில், லட்சுமிநகர், கோணவாய்க்கால் உள்ளிட்ட பலவேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் கையைழுத்து பெற்று வருகின்றனர். கையெழுத்து பிரதிகள் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் மூலம் மத்திய அரசுக்கும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கையெழுத்து இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: