மின் அமைப்பு தொழிலாளர் சங்க கூட்டம்

ஈரோடு, ஜன. 19: ஈரோட்டில் தமிழ்நாடு தனியார் அண்ணா மின் அமைப்பு தொழிலாளர்களின் சங்க நிர்வாகிகளின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மின் மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார்.  இதில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவது எனவும், மின் ஒப்பந்த பணியாளர்களுக்கு மருத்துவ சோதனையை அந்தந்த மாவட்டத்திலேயே செய்ய ஆவணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் அல்லிமுத்து, அலுவலக செயலாளர் கிஷோாகுமார், நிர்வாகி கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

>