காலிங்கராயன் சிலைக்கு அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள் மரியாதை

பவானி,ஜன.19: காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்ட நாளான தை மாதம், 5-ம் தேதி காலிங்கராயன் தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் இந்நாளை காலிங்கராயன் தினமாக அறிவித்து, அரசு விழாவாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, பவானி காலிங்கராயன் அணைக்கட்டு வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), எஸ்.ஈஸ்வரன் (பவானிசாகர்), வி.பி.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காலிங்கராயன் முழு உருவ வெண்கலச் சிலைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட எஸ்பி தங்கதுரை, தமாகாமத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணைமேயர் பழனிச்சாமி, மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சித் தலைவர் மகேஸ்வரன்,  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திமுக சார்பில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் கந்தசாமி, மாநில நெசவாளர் அணிச் செயலாளர் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியம், பவானி நகர முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் தவமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில விவசாய அணித் தலைவர் நாகராஜ் தலைமையில் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பல்வேறு பொதுநல அமைப்புகள்,  பொதுமக்களும் காலிங்கராயன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>