×

திருவில்லிபுத்தூரில் நூறு நாள் பணிகளை விருதுநகர் எம்பி ஆய்வு

திருவில்லிபுத்தூர், ஜன. 19:  திருவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் நடைபெறும் நூறு நாள் திட்டப்பணிகளை விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்தார். இதற்காக அவர் திருவில்லிபுத்தூரில் யூனியன் அலுவலகத்திற்கு வருகை தந்தார். திருவில்லிபுத்தூர் யூனியன் தலைவர் மல்லி ஆறுமுகம், மல்லி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அதிகாரி சிவகுமார் மற்றும் அலுவலர்கள் அவரை வரவேற்றனர். இதன் பின் கீழராஜகுலராமன், தொம்பக்குளம், கலங்காபேரி,ஆர்.ரெட்டியபட்டி, சாமிநாதபுரம்,  டி.மானகசேரி ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகளை எம்பி ஆய்வு ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளிடம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக அவர் திருவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் அடிப்படையில் திருவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் எந்த பணியும் துவக்கப்படவில்லை. மாநில அரசின் டெண்டர் விடுகின்ற முறைகளில் நடைபெறும் தவறுகளின் அடிப்படையில் இந்த பணி துவங்கவில்லை.பிரதமர் மோடி, தமிழக முதல்வர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதன்பின் பாமர மக்களுக்கு அதை போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் வன்னியராஜ், இளைஞர் அணியைச் சேர்ந்த பாண்டியன், மாவட்ட செயலாளர் முருகேசன் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Tags : Virudhunagar ,Srivilliputhur ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...