எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

வருசநாடு, ஜன.19: கடமலை-மயிலை தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா நடந்தது. தெற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் தர்மராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். மாவட்ட கவுன்சிலர் இளம்வழுதிப்பாண்டியன், கம்பம் தொகுதி இணைச்செயலாளர் ஜெகநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் பிரேம் ஆனந்தன், ஒன்றிய அவைத்தலைவர் தர்மர், ஒன்றிய எம்ஜிஆர் அணி ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய மாணவரணி செயலாளர் பாரதி, ஒன்றியக் கவுன்சிலர் முருகன், ஊராட்சி செயலாளர் மணிசேகரன், கிளைச் செயலாளர்கள் ஈஸ்வரன், செந்தட்டிக்காளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>