சென்னை: ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது. ரூ.4,000 கோடி செலவாகும் என்பதால் ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கும், பள்ளி மாணவிகளுக்கும் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று நீதிபதி கேள்வி கேட்டுள்ளார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்று அரசும், மனுதாரரும் விளக்கம் தர உத்தரவு அளித்துள்ளது.
