சென்னை: 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,
நாளை மறுநாள் மக்கள் திரள் போராட்டம்: காங்கிரஸ்
நாளை மறுநாள் சென்னையில் மக்கள் திரள் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காந்தியின் பெயரை அழிக்க துணிந்துவிட்டார்கள் என்றால் இந்தியாவின் பெயரை அழிக்க துணிந்துவிட்டனர் என்றுதான் அர்த்தம்.
தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கல்வி நிதி தர மறுப்பு
100 ஆண்டுகள் காணாத அளவில் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டில் பேரழிவு ஏற்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு நிதி தரவில்லை. பல ஆயிரம் கோடி கல்வி நிதி தர ஒன்றிய அரசு மறுக்கிறது. தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய கல்வி நிதியை தர ஒன்றிய அரசு மறுக்கிறது. தமிழ்நாட்டின் மீது வரலாற்று போரை ஒன்றிய பாஜக அரசு நடத்துகிறது. தமிழ்நாட்டின் வரலாறு ஒன்றிய அரசுக்கு பிடிக்கவில்லை.
