×

போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டுனர்கள் தாமாக பின்பற்ற வேண்டும் போலீஸ் கமிஷனர் அறிவுரை

மதுரை, ஜன.19: மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு தொடர் ஓட்ட நிகழ்ச்சி, மதுரையில் நேற்று நடந்தது. இருசக்கர வாகன ஓட்டுனர்கள் முறையாக ஹெல்மெட் மற்றும் முகக்கவசம்  அணிந்து, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும்  வகையில் நடந்த இந்த தொடர் ஓட்டம் தமுக்கம் மைதானம் சந்திப்பிலிருந்து துவங்கியது. கலெக்டர்  அன்பழகன், மாநகர் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த தொடர் ஓட்டம் தமுக்கம் வழியாக கோகலே ரோடு, பிடிஆர்.பழனிவேல்ராஜன் சிலை, பாண்டியன் ஓட்டல் சந்திப்பு, அவுட்போஸ்ட் வழியாக தமுக்கம் வந்தடைந்தது.

நிகழ்ச்சியில் மாநகர் போலீஸ் கமிஷனர் பேசுகையில், ‘‘போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் மட்டுமே தீர்வாகாது. பொதுமக்கள் தாமாக முன்வந்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில், மாநகர் போக்குவரத்து துணை கமிஷனர் சுகுமாறன், உதவி கமிஷனர் திருமலைக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அனைத்து போக்குவரத்து ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர். அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

Tags : motorists ,Commissioner of Police ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...