பக்தர்களுக்கு செயல்முறை விளக்கம்

பழநி, ஜன. 19:  பழநி வரும் பக்தர்களிடம் ஆபத்து காலங்களில் செயல்படும் முறை குறித்து தீயணைப்புத்துறையினர் செயல்முறை விளக்கமளித்தனர். பழநி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா வரும் 22ம் தேதி துவங்க உள்ளது. இவ்வாறு வரும் பக்தர்கள் இடும்பன்குளம் மற்றும் சண்முகநதி ஆற்றில் குளிப்பது வழக்கம். தொடர் மழை காரணமாக இடும்பன்குளம் நிரம்பியும், சண்முகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் ஆபத்தில் சிக்கினால் காப்பற்றுவதற்காக தீயணைப்புத்துறை சார்பில் சிறப்பு காமாண்டோ குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பழநி வரும் பக்தர்களிடம் நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான தீயணைப்புப்படையினர் ஆபத்து காலங்கள் மற்றும் தீவிபத்து காலங்களில் நடந்து கொள்ளும் முறை குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகித்தனர். தொடர்ந்து செயல்முறை விளக்கமளித்தனர். இதனைத்தொடர்ந்து தீ செயலி குறித்தும், அதனை பதவிறக்கம் செய்யும் முறை, செயலியில் உள்ள நன்மைகள் குறித்து எடுதுத்துரைத்தனர்.

Related Stories: