பணியில் சேர்ந்த போலீசாரின் வாரிசுகள் உயர் பதவிக்கு முயற்சிக்க வேண்டும் டிஐஜி முத்துச்சாமி அட்வைஸ்

திண்டுக்கல், ஜன. 19: கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்த உயர்கல்வி படித்த போலீசாரின் வாரிசுகள், அரசு தேர்வு எழுதி, உயர் பதவிக்கு முயற்சிக்க வேண்டும் என டிஐஜி முத்துச்சாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பணியில் இருந்தபோது உயிரிழந்த போலீஸ்காரர்களின் வாரிசுதாரர்கள் 1,526 பேருக்கு கருணை அடிப்படையில் காவல்துறையில் தகவல் பதிவு உதவியாளர் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஏற்கனவே பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 36 பேர் நேற்று முதல் நாளாக பணியில் சேர்ந்தனர். இதில் டிஐஜி முத்துச்சாமி, ஏடிஎஸ்பி இனிகோ திவ்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., பேசுகையில், ‘பணியில் சேர்ந்ததில் பெரும்பாலானோர் உயர்படிப்பு படித்தவர்களாக இருப்பீர்கள். இந்த வேலையில் இருந்து கொண்டே அரசு தேர்வுகள் மூலம் உயர் பதவிக்கு முயற்சி செய்யுங்கள். தேர்வுகள் ஏதுமின்றி வந்தாலும் நீங்களும் அரசுப் பணியாளர்களே. வேலையை நேசித்து விருப்பத்தோடு பணியாற்றுங்கள். பல போலீசாரின் தியாகங்கள் மூலமாக கிடைத்த பணியினை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: