×

இன்பதுரை எம்எல்ஏ முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்

பணகுடி, ஜன.19: பணகுடி அருகே இன்பதுரை எம்எல்ஏ முன்னிலையில், மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.  பணகுடி அருகே பரமேஸ்வரபுரத்தில் உள்ள ராதாபுரம் மேற்கு ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து இன்பதுரை எம்எல்ஏ முன்னிலையில்  உதயத்தூர் ஊராட்சி திமுக செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் 20 பேர் அதிமுகவில் இணைந்தனர்.  அப்போது அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் ராதாபுரம் மேற்கு அந்தோனி அமலராஜா, கிழக்கு கேபிகே செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் வள்ளியூர் அருண்குமார், உவரி ரமேஷ், கூடங்குளம்  துரைசாமி, சுரேஷ்குமார், கபாலீஸ்வரன், தனம் மூர்த்தி, சுப்புராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : opposition parties ,Inbathurai MLA ,AIADMK ,
× RELATED ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும்...