அம்பையில் வெள்ள சேதம் திமுகவினர் ஆய்வு

அம்பை, ஜன. 19: அம்பை பகுதிகளில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளச்சேதங்களை  ஞானதிரவியம் எம்பி, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.   தொடர்மழையால் நிரம்பிய  மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டது.  இதனால் மணிமுத்தாறு, ஏர்மாள்புரம், வைராவிகுளம், மன்னார்கோவில், அம்பை, , வெள்ளங்குளி போன்ற இடங்களில் பயிரிட்டிருந்த நெற்பயிகள் நீரில் மூழ்கின. தொடர் மழையால் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து கடும் மழையால் பாதிக்கப்பட்ட வெள்ளச்சேதங்களை ஞானதிரவியம் எம்பி, நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் திமுகவினர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். மேலும் ஏர்மாள்புரம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிவாரண உதவி வழங்கினர்.

 பின்னர் அணை பகுதிளை பார்வையிட்டனர். முன்னதாக, வைராவிகுளம் ஊராட்சி, முடி நயினார்குளத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தின் கீழ் மறுகால் ஓடையில் சுமார் 9 தடுப்பு அணைகள் கட்டி நீர் வெளியேற முடியாமல் சுற்றியுள்ள 25ஏக்கர் பாசன வயல்வெளியில் மழை நீர் தேங்கி நெற்பயிர்கள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் பார்வையிட்டு 40 அடி பெருங்கால் பாசன விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்புகொண்டு வலியுறுத்தினார்.  அப்போது திமுக தொண்டர் அணி மாநில துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர்கள் அம்பை பரணிசேகர், சேரை முத்துபாண்டி (எ) பிரபு, ராஜகோபால், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் செல்லத்துரை, துணை அமைப்பாளர் வேல்முருகன், அம்பை தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாதுரை, பால் மாரிப்பாண்டியன், விவசாயிகள் நலச்சங்க தலைவர் வக்கீல் பாபநாசம், ஆண்டி, ராமையா, சுப்பிரமணியன், கதிரவன, நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: