ஆத்தூர், புன்னைக்காயல் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை கனிமொழி எம்.பி. ஆய்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்

ஆறுமுகநேரி,ஜன.19:ஆத்தூர் மற்றும் புன்னைக்காயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை கனிமொழி எம்பி பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

    தொடர்மழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முக்காணி, ஆத்தூர், மேலாத்தூர், புன்னைக்காயல் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் கனிமொழி எம்பி பார்வையிட்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேலாத்தூர் ஜே.ஜே.நகர், அருந்ததியர்காலனி பொதுமக்களை சந்தித்து சுமார் 70 பேருக்கு அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினார். தொடர்ந்து புன்னைக்காயல் பகுதிக்கு சென்ற கனிமொழி எம்பி அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, திருமண மண்டபத்தில் தங்கியிருந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைதொடர்ந்து புன்னைக்காயல் பங்குத்தந்தை பிளாங்கிளினை சந்தித்தார்.

  திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட வர்த்த அணி துணை அமைப்பாளர் இளங்கோ,  ஒன்றிய செயலாளர்கள் ஆழ்வை நவீன்குமார், கருங்குளம் இசக்கிபாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே. ஜெகன், மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் மாணிக்கவாசகம், கோபி,  மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், துணைத்தலைவர் பக்கீர்முகைதீன், முன்னாள் துணைத்தலைவர் அக்பர், ஆத்தூர் நகர பொறுப்பாளர் முருகப்பெருமாள், மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அன்னமரியான், கமாலுதீன், யூனியன் கவுன்சிலர்மாரிமுத்து, புன்னைக்காயல் பஞ்சாயத்து தலைவர் சோபியா, ஊர்தலைவர் இட்டோ, யூனியன் கவுன்சிலர் தாமஸ் உள்பட பலர் உடன் சென்றனர்.

Related Stories: