70 வயது கடந்தவர்களுக்கு ஓய்வூதிய தொகை 10 % அதிகரிக்க வேண்டும்: காவல்துறை ஓய்வு பெற்ற அமைச்சு பணியாளர்கள் கோரிக்கை

நாகர்கோவில், டிச.15: குமரி மாவட்ட காவல்துறை ஓய்வு பெற்ற அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் 14ம் ஆண்டு விழா நிகழ்ச்சி, நாகர்கோவிலில் நடைபெற்றது. தலைவர் வில்லியம் தேவதாஸ் இமானுவேல் தலைமை வகித்தார்.  விழாக்குழு தலைவர் அப்பாத்துரை வரவேற்றார். சங்க பொருளாளர் மனோகரன் நினைவு பரிசை வழங்கினார்.

நிகழ்ச்சியில், 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க துணைத்தலைவர் சேவியர் அக்ேலாசன், செயலாளர் ஸ்ரீ ராஜகோபால கிருஷ்ணன், உறுப்பினர் தனிஸ்லாஸ், தங்கராஜா, சண்முகம், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: