கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியில் ₹5.50 லட்சத்தில் குடிநீர் திட்ட பணி ராஜேஸ்குமார் தொடங்கி வைத்தார்

சேந்தமங்கலம், ஜன.19: சேந்தமங்கலம் ஒன்றியம், கல்குறிச்சி ஊராட்சி வெள்ளாளப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ₹3.50 லட்சம் மதிப்பில் மின்மோட்டார், பைப்லைன், மின் வயர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு உள்ள அருந்ததியர் தெருவில் திறந்த வெளி பொது கிணற்றை தூர்வாரி, புதிய மின் மோட்டார் பொருத்தி, இரும்பு தடுப்புகள் அமைக்க ₹2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் கலந்துகொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், ‘திமுக ஆட்சி வந்தவுடன் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்,’ என உறுதி அளித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் அசோக்குமார், ஒன்றியக்குழு தலைவர் மணிமாலா சின்னுசாமி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி, ஐடி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத், நிர்வாகிகள் குழந்தைவேலு, மாது, சின்னத்தம்பி, நல்லூர் ராஜேந்திரன், விஜயகுமார், அருள், முருகேசன், செல்வராசு, குழந்தைவேல், சரவணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: