கலெக்டர் எச்சரிக்கை அழுகிய நெற்கதிர்களை கையில் ஏந்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, ஜன.19: வேளாண் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும். கனமழையால் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் அழுகிய நெற் கதிர்களை கையில் ஏந்தி மன்னார்குடியில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயத்தை அழித்து விவசாயிகளை அகதிகளாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்ட திருத்தங்களை உடனடியாக திரும்ப பெறக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் நகர செயலாளர் மீனாம்பிகை தலைமையில் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரவள்ளி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் வனிதா அருள்ராஜன், ஒன்றிய செயலாளர் பூபதி, துணைச்செயலாளர் ஈஸ்வரி உள்ளிட்ட மாதர் சங்க நிர்வாகிகள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பெண்கள் கனமழையால் அழுகிய நெற்கதிர்களை கைகளில் ஏந்தி மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கினை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Related Stories:

>