உத்தனப்பள்ளி அருகே மினிலாரி-பஸ் மோதல் 30 பயணிகள் காயம்

சூளகிரி, ஜன.19: உத்தனப்பள்ளி அருகே, மினி லாரி, அரசு பஸ் மோதியதில் பயணிகள் 30 பேர் காயமடைந்தனர். தர்மபுரியில் இருந்து ஓசூருக்கு நேற்று முன்தினம் இரவு, 30 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. சுமார் 8.30 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்த போது, பெங்களூருவில் இருந்து உருளைக்கிழங்கு லோடு ஏற்றி வந்த மினி லாரியும், அரசு பஸ்சும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் லாரி சாலையில் கவிழ்ந்தது. லாரியில் இருந்த 100க்கும் மேற்பட்ட உருளைகிழங்கு மூட்டைகள் சாலையில் விழுந்தது. விபத்தில் லாரி டிரைவர், 30 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின் பேரில், விரைந்து வந்த உத்தனப்பள்ளி போலீசார் உருளைகிழங்கு மூட்டைகள் மற்றும் லாரியை மீட்டு பஸ்சை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: