105 பெண்கள் உள்பட 400 பேர் கைது குடவாசலில் பள்ளி இடிந்தது எதிரொலி பள்ளி கட்டிட உறுதித்தன்மை, முன்னேற்பாடு பணிகள்

திருவாரூர், ஜன.19: குடவாசலில் பள்ளி இடிந்து விழுந்தது எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கட்டிடங்கள் உறுதித்தன்மை, முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சாந்தா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கடந்த 13ம் தேதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முதல் தளமானது திடீரென இடிந்து தரைமட்டமான சம்பவம் குடவாசல் பகுதி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் இருந்து வரும் பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பள்ளிகள் விடுமுறை காலம் என்பதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் குறைந்த ஆண்டுகளிலேயே இந்த கட்டிடம் இடிந்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்திட வேண்டுமென பெற்றோர் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட பனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் கட்டிடத்தின் உறுதித்தன்மை மற்றும் முன்னேற்பாடு பணிகள் போன்றவை குறித்து கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், நாளை (இன்று) முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இயங்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்றவற்றினை உறுதி செய்யும் வகையில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் அரசு அறிவிப்பின்படி ஒரு வகுப்புகளுக்கு 25 மாணவர்களுக்கு மிகாமில் வகுப்பறைகள் இயங்க வேண்டும். வகுப்பறைகள் உட்பட பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்பதுடன், உடல் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும். மாணவர்கள் கிருமிநாசினி கொண்டு கைகழுவ செய்திட வேண்டும் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். ஆய்வின்போது ஆர்டிஓ பாலச்சந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சந்தானம் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: