முன்கூட்டியே அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் திமுக தகவல் தொழில் நுட்ப அணி வலியுறுத்தல்

மன்னார்குடி, ஜன.19: நடப்பு பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முன்கூட்டியே திறக்க வேண்டும் என மன்னார்குடியில் நடந்த திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன், எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் இளையராஜா, இந்திரஜித் ஆகியோர் தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது.

கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த், திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் வீரக்குமார், நடேஷ், ஒன்றிய நகர நிர்வாகிகளான சுகுமார், சிவராஜ், பாலகுமாரன், அப்பு ஆகியோர் பேசினர். கூட்டத்தில், கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வெள்ள சேதங்களை ஆராய்ந்து மறு கணக்கீடு செய்து பயிர் காப்பீட்டு உடனே வழங்க வேண்டும். நடப்பு பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முன்கூட்டியே திறந்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டும். வேளாண் சட்ட திருத்தங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறை வேற்றப்பட்டன. முன்னதாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங் கிணைப்பாளர் மதி முத்துக்குமார் வரவேற்றார். சிவகாந்தி நன்றி கூறினார்.

Related Stories: