₹1.53 கோடி மதிப்பில் சாலை பணிகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்

தர்மபுரி, ஜன.19: பாலக்கோடு ஒன்றியம் சூடனூர், பஞ்சப்பள்ளி, அத்திமுட்லு ஆகிய ஊராட்சிகளில் ₹1.53 கோடி மதிப்பில் சாலை அமைத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல், தடுப்பணை அமைத்தல், சிறுபாலம் அமைத்தல் உள்ளிட்ட 22 வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் கார்த்திகா தலைமை வகித்தார். உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் அன்பழகன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசினார். விழாவில் சப் கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் தொமு நாகராஜன், மாவட்ட அறங்காவல் குழுத்தலைவர் அரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>