×

பேரூராட்சி பணியாளர்கள் அறிவித்த தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு

நாகர்கோவில், ஜன.19 : தமிழக ேபரூராட்சி துறையில் பணிபுரியும் குடிநீர் பணியாளர், குடிநீர் திட்ட காவலர், மின் பணி உதவியாளர் ஆகியோரின் தர ஊதியம் 1,300 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே பழைய தர ஊதியம் ரூ.1900 வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு ேபரூராட்சி பணியாளர் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. நாகர்கோவிலில் ேபரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் முன் நேற்று (18ம்தேதி) மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் போராட்டம் ெதாடர்பாக நேற்று காலை ேபரூராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயலட்சுமி தலைமையில் ேபச்சுவார்த்ைத நடந்தது. டவுன் டி.எஸ்.பி. வேணுகோபால், அலுவலக கண்காணிப்பாளர்கள் ராஜேஷ்வரன், ராஜமணி, ேபரூராட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகர் ஆகியோர் பங்ேகற்றனர். ஏற்கனவே ஊதியம் குறைப்பு தொடர்பாக நீதிமன்றத்தில், பேரூராட்சி பணியாளர்கள் தடையாணை பெற்றுள்ளனர். இருப்பினும், சம்பள குறைப்பை தமிழக அரசு கைவிட வில்லை என பேரூராட்சி பணியாளர்கள் குற்றம் சாட்டினர். அப்போது, நீதிமன்ற உத்தரவுபடி அரசு வக்கீலுடன் ஆலோசனை நடத்தி தர ஊதியம் மீண்டும் ₹1,900 என்று உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயலட்சுமி உறுதியளித்தார். இதையடுத்து மாலை நேர தர்ணா தள்ளி ைவக்கப்படுவதாக, ேபரூராட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகர் ெதரிவித்தார். முன்னதாக நேற்று காலை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனை, பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகர், தர ஊதியம் குறைப்பு குறித்து தகவல் தெரிவித்தார். அப்போது தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செனறு, மீண்டும் தர ஊதியம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முத்தரசன் உறுதி அளித்தார்.

Tags : protest ,Tarna ,
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...