தடுப்பணையை உடைத்து தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவனின் உடல் மீட்பு

விழுப்புரம், ஜன. 19:      விழுப்புரம் அடுத்துள்ள திருவெண்ணெய்நல்லூர் சித்தானங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் வினோத்குமார்(21), தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.  பொங்கல் விடுமுறையொட்டி, கடந்த 15ம் தேதி  விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளித்துள்ளார். அப்போது, ஆற்றில் நீர் அதிகரித்ததை அடுத்து வினோத்குமார் நீரில் அடித்து செல்லப்பட்டார். 3 மாணவர்கள் தப்பினர். தகவலின் பேரில், விழுப்புரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, வினோத்குமார் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மூன்றாவது நாளாக நேற்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பின்பு தடுப்பணையை உடைத்து, வினோத்குமார் உடலை நேற்று மாலை 4 மணி அளவில் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>