பைக்கில் கடத்திய 80 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

வானூர், ஜன. 19: வானூர் தாலுகா கிளியனூர் பகுதியில் இரவு நேரங்களில் ரேஷன் அரசி கடத்தி விற்பனை செய்வதாக விழுப்புரம் மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு தனி தாசில்தார் வேல்முருகனுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அவர் தலைமையில் அதிகாரிகள் திண்டிவனம்- கிளியனூர் சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் தேற்குணம் கிராமத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி (52) என்பதும், 80 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியதும் தெரியவந்தது. அதையடுத்து பைக்குடன் அரிசியை பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி நியாய விலைக்கடையில் இருந்து கடத்தப்பட்டதா அல்லது பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி விற்பனைக்கு எடுத்து சென்றாரா என்பது குறித்து கிளியனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>