×

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது

உளுந்தூர்பேட்டை, ஜன. 19:  உளுந்தூர்பேட்டை அருகே நகர் மன்னார்குடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் வீரபத்திரன்(27). சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகில் இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து கேட்ட சிறுமியின் தந்தையை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜி வழக்கு பதிந்து வீரபத்திரனை கைது செய்தார்.


Tags :
× RELATED காதலை ஏற்க மறுத்த சிறுமி குத்திக்கொலை: 25 வயது வாலிபர் கைது