பைக் விபத்தில் வாலிபர் பலி

திருவெண்ணெய்நல்லூர், ஜன. 19:  விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர், காந்திகுப்பம், மூன்றாவது தெருவைச்சேர்ந்த ஜெயபால் மகன் அசோகன்(26), இவரும், அதே ஊரைச்சேர்ந்த கலியமூர்த்தி மகன் துர்கா(30) ஆகியோர் பைக்கில் சொந்த வேலை காரணமாக அரசூர் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினர். ஆலங்குப்பம் நரிகுறவர்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகே செல்லும்போது எதிரே வந்த அரும்பட்டு கிராமத்தைச்சேர்ந்த அழகேசன் மகன் பால் வியாபாரி சக்திவேல்(45) பைக் மோதியது. இதில் மூவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அசோகன் சிகிச்சை பலனில்லாமல் நேற்று பரிதாபமாக உயிழந்தார். இவருக்கு சந்திரலேகா(23) என்ற மனைவியும், சாதனா என்ற 8 மாத கைகுழந்தையும் உள்ளது. துர்கா முண்டியபாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சக்திவேல் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ஜெயபால் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் (பொ) ராமதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>