மேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை ₹42 லட்சம்

மேல்மலையனூர், ஜன. 19:  மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மார்கழி மாதத்தில் பக்தர்களால் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட காணிக்கை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பணம்ரூ.42,15,902ம், தங்கம் 180 கிராம், வெள்ளி 265 கிராம் இருந்தது. உண்டியல் எண்ணும் பணி கோயில் உதவி ஆணையர் ராமு, விழுப்புரம் உதவி ஆணையர் ஜோதி மற்றும் கோயில் அறங்காவலர்கள், ஊழியர்கள் முன்னிலையில் நடந்தது. வளத்தி காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>