×

புதுவையில் 23 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, ஜன. 19: புதுச்சேரிசுகாதாரத்துறை செயலர் அருண் கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 1,584 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 7, காரைக்கால் - 3, மாகே - 13 என மொத்தம் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், புதுவையில் 64 வயது முதியவர் தொற்றால் பாதிக்கப்பட்டு இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 643 ஆக உள்ளது.  இதுவரை 38,669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Corona ,Puduvayal ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...